Published : Jan 04, 2025, 11:39 PM ISTUpdated : Jan 05, 2025, 01:22 AM IST
Digital Personal Data Protection Act (DPDA): டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் 18 வயதிற்குட்பட்டவர்கள் குழந்தைகள் என வரையறுக்கிறது. அவர்களைப் பற்றிய தரவுகளைக் கையாள பெற்றோரின் ஒப்புதல் பெறுவது கட்டாயம்.
குழந்தைகளின் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் ஆகஸ்ட் 2023 இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
25
Parental consent for social media access
டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் வரைவு விதிகளின்படி, 18 வயதுக்குட்பட்டவர்கள், சமூக ஊடக தளங்களை அணுகுவதற்கு முன் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஒப்புதல் பெறவேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலர் சரிபார்த்து ஒப்பதல் அளித்தால் மட்டுமே சோஷியல் மீடியாவை பயன்படுத்த முடியும்.
35
Children using mobile
ஆகஸ்ட் 2023ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சட்டத்தின் விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், பெற்றோர் ஒப்புதல் அளிப்பதற்கு முன் சரிபார்ப்பது எவ்வாறு என்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
45
DPDA rules for kids using social media
இந்தச் சட்டத்தின் வரைவு விதிகள் குறித்து பொதுமக்களின் கருத்து கூற பிப்ரவரி 18ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. வரைவு விதிகள், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாளச் சான்று அல்லது டோக்கன் மூலம் குழந்தையின் வயதைச் சரிபார்க்க வேண்டும் என்று கூறுகிறது. இதனை டிஜிட்டல் லாக்கர் சேவை மூலம் செயல்படுத்தலாம் என்றும் தெரிவிக்கிறது.
55
Faceboo, X, Instagram, YouTube
குழந்தைகளின் தரவுகளைக் கையாளுவது தொடர்பான டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (DPDP) விதிகளில் வழங்கப்பட்டுள்ள முக்கிய விளக்கம் ஒன்று உள்ளது. ஒரு குழந்தை சமூக வலைத்தளத்தில் ஒரு பயனர் கணக்கை உருவாக்க விரும்பினாலும், பெற்றோரின் ஒப்புதலைப் பெறுவது அவசியம்.