Govt Scheme: இனி நீங்க சொந்த வீட்டுல இருக்க போறீங்க.! வீடு கட்ட அள்ளிக்கொடுக்கும் விஜய்.! உடனே இடத்த ரெடி பண்ணுங்க.!

Published : Aug 13, 2026, 10:37 AM IST

‘வெற்றி வீடு’ திட்டத்தின் கீழ் வீடு கட்ட வழங்கப்படும் நிதி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சொந்த வீடு கட்ட காத்திருக்கும் பயனாளிகளுக்கு பெரும் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

PREV
16
தமிழ்நாடு அரசு சொன்ன சந்தோஷ செய்தி.!

தமிழக சட்டமன்றத்தில் 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வரவு செலவு திட்டங்கள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ‘வெற்றி வீடு’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.

26
ரூ.3.11 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம்

சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் மரிய வில்சன், முந்தைய ஆட்சியில் ‘வெற்றி வீடு’ திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு ரூ.3.11 லட்சம் வரை நிதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார். தற்போது அந்த நிதி உதவியை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்தார்.

வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்களின் விலை, தொழிலாளர் கூலி உள்ளிட்ட செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நிதி உதவியை உயர்த்துவது பயனாளிகளுக்கு கூடுதல் ஆதரவாக அமையும். இதன் மூலம் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவில் இருக்கும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

36
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்

அரசின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கும் அமைச்சர் அவையில் பதிலளித்தார். நிதி நிலைமை சீரடைந்ததும் அரசு அளித்துள்ள அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் படிப்படியாக முழுமையாக நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

ஆட்சிப் பொறுப்பேற்றபோது மாநிலத்தின் நிதிநிலை சவாலான நிலையில் இருந்ததாகவும், வருவாயை அதிகரிப்பது மற்றும் செலவினங்களை முறையாக நிர்வகிப்பது தொடர்பாக உயர்மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

46
ஏற்கனவே பல திட்டங்கள் செயல்பாட்டில்

அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் சில ஏற்கனவே நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், 200 யூனிட் இலவச மின்சாரம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், அண்ணன் சீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், முந்தைய அரசின் திட்டங்களை அப்படியே நகலெடுப்பதாக கூறப்படும் விமர்சனத்தையும் அமைச்சர் மறுத்தார். ஏற்கனவே இருந்த திட்டங்களில் பொதுமக்களுக்கான பயன்களை அதிகரிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கினார்.

56
மகளிர் உரிமைத்தொகை குறித்து விளக்கம்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தையும் அமைச்சர் உதாரணமாகக் குறிப்பிட்டார். 2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், ஆட்சி அமைந்த பின்னர் சுமார் 28 மாதங்கள் கழித்து, 2023 செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

அந்த நேரத்தில் மாநிலத்தின் நிதிநிலை காரணமாக திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய அரசின் நிதி நிலையும் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதை படிச்சுட்டீங்களா? https://tamil.asianetnews.com/gallery/agriculture/kisan-credit-card-2026-how-to-get-a-loan-without-owning-land-5wxykr6

66
ரூ.56,985 கோடியாக மூலதனச் செலவு

மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் அமைச்சர் முக்கிய தகவல்களை வெளியிட்டார். 2026-27 நிதியாண்டில் மூலதனச் செலவின வளர்ச்சி விகிதம் 11.25 சதவீதமாக அதிகரித்து, ரூ.56,985 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மக்களுக்கு பயனளிக்கும் உண்மையான வளர்ச்சிப் பணிகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இதனால், ‘வெற்றி வீடு’ திட்டத்தின் நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு, சொந்த வீடு கட்டத் திட்டமிடும் குடும்பங்களுக்கு முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. அரசு நிதி உதவியை எவ்வாறு, எந்த தகுதிகளின் அடிப்படையில் வழங்கும் என்பது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் வெளியாகும் போது, பயனாளிகளுக்கு கூடுதல் தெளிவு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே

https://tamil.asianetnews.com/gallery/career/indira-gandhi-national-open-university-job-vacancy-apply-now-7c0vm0i

https://tamil.asianetnews.com/gallery/career/indira-gandhi-national-open-university-job-vacancy-apply-now-7c0vm0i

Read more Photos on
click me!

Recommended Stories