சென்னை டூ டெல்லி 26 மணி நேரத்தில் போகலாம்! 6 மணி நேரம் மிச்சம்! வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்!

Published : May 23, 2025, 07:40 AM ISTUpdated : May 23, 2025, 10:40 AM IST

சென்னை டூ டெல்லி இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் இந்த வழித்தடத்தில் 6 மணி நேரம் மிச்சமாகிறது.

PREV
14
Chennai to Delhi Vande Bharat Express

இந்தியாவில் தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். 

இந்தியாவில் சொகுசு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், சாதாரண முன்பதிவில்லாத ரயில்கள், மெமு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு அதிவேக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

24
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்

இதேபோல் நாட்டிலேயே அதிவேகமாக செல்லும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மற்ற ரயில்களை விட அதிவேகமாக செல்வதாலும், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு முன்கூட்டியே செல்ல முடியும் என்பதாலும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

34
சென்னை டூ டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

இப்போது சென்னையில் இருந்து டெல்லிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 32 மணி நேரம் செல்கிறது. மேலும் சென்னை நிஜாமுதின் துரந்தோ எக்ஸ்பிரஸ் 28 மணி நேரம் 5 நிமிடத்தில் செல்கிறது.

 இதனால் சென்னையில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயிலை 26 மணி நேரத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு எக்ஸ்பிரஸை ஒப்பிடும்போது வந்தே பாரத்தில் பயண நேரம் 6 மணி நேரம் மிச்சமாகிறது.

44
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்

இந்தியாவில் விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட உள்ளது. ஆகையால் சென்னை டூ டெல்லி இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்க்கப்படும் என கூறப்படுகிறது. 

இந்த ரயிலில் ஸ்லீப்பர் மட்டுமின்றி உட்காரும் வசதியும் இடம்பெற்றிருக்கும். கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வந்தே பாரத் ரயில் ஏசி சேர் காரில் 1,805 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் 3,355 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கும்?

சென்னை டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விஜயவாடா, நாக்பூர், போபால் சந்திப்பு, ஜான்சி சந்திப்பு, குவாலியர் சந்திப்பு ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்ல வாய்ப்புள்ளது. இந்த ரயில் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories