தென்காசி அருகே இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில், காதலன் உல்லாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பியதால், அவர்கள் மிரட்டியதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் மீனாட்சிபுரம் தெருவைச் சேர்ந்த பிரேம் சரண். இவரது மனைவி முத்துலட்சுமி (26). இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லாததால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தாத்தா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாவூர்சத்திரம் அடுத்துள்ள குறும்பலாப்பேரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேலுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
24
இளம்பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ
இந்நிலையில் இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்ததை சக்திவேல், இளம்பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ மற்றும் புகைப்படங்களும் எடுத்துள்ளார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் முத்துலட்சுமியின் வீட்டிற்கு தெரியவந்ததை அடுத்து கண்டித்துள்ளனர். இதனையடுத்து சக்திவேலிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் உல்லாச வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து முத்துலட்சுமியிடம் பணம் கேட்டு மிரட்டி ரூ.4 லட்சம் வரை பறித்துள்ளார்.
34
அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்
பின்னர் மேலும் ஒரு லட்சம் பணம் கேட்டு முத்துலட்சுமியை மிரட்டியுள்ளார். வேறு வழியில்லாமல் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் முத்துலட்சுமி கூறியுள்ளார். இதுகுறித்து ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து போலீசார் சக்திவேலை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் இளம்பெண்ணுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை போலீசார் அழித்தது மட்டுமல்லாமல் அவரை எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில் தன்னை போலீசில் மாட்டி விட்டதால் ஆத்திரமடைந்த சக்திவேல், அவரது மனைவியின் செல்போனில் மறைத்து வைத்திருந்த இளம்பெண்ணின் படங்கள், உல்லாச வீடியோவை முத்துராஜ் (36) முருகேசன் (42) உள்ளிட்ட பலருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து தங்களின் ஆசைக்கும் இணங்குமாறு மிரட்டி வந்துள்ளனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான பெண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் அவர் தற்கொலைக்கு காரணமான சக்திவேல், முத்துராஜ், முருகேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர்.