TASMAC: குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. மதுபானங்கள் விலை உயருகிறது? எவ்வளவு? எப்போது தெரியுமா?

Published : Jul 08, 2026, 12:41 PM IST

Liquor Prices: தமிழகத்தில் தற்போது 4,048 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் விஸ்​கி, பிராந்​தி, வோட்​கா, ரம் போன்ற இந்​திய தயாரிப்பு வெளி​நாட்டு வகை மது​பானங்​கள் விற்​பனை செய்யப்படுகின்றன.

PREV
15
தமிழகத்தில் 4048 டாஸ்மாக் கடைகள்

தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அருகில் உள்ள மொத்தம் 717 கடைகள் மூடப்பட்டதை அடுத்து தற்போது 4,048 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் விஸ்​கி, பிராந்​தி, வோட்​கா, ரம் போன்ற இந்​திய தயாரிப்பு வெளி​நாட்டு வகை மது​பானங்​கள், பீர், ஒயின் உள்ளிட்ட மது​பானங்​கள் விற்​பனை செய்​யப்​படு​கின்​றன.

25
தினமும்120 கோடிக்கு மது விற்பனை

தினமும் சுமார் 120 முதல் 150 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. அதுவும் தீபாவளி மற்றும் பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மது விற்பனை நடைபெறும். அரசு இயந்திரமே டாஸ்மாக்கில் வரும் வருமானத்தை நம்பி இயங்குவதாக கூறப்படுகிறது. மற்றொரு புறம் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

35
மது​பானங்​கள் விலை உயர்கிறது

இந்​நிலை​யில் மது​பானங்​களின் விலையை உயர்த்த டாஸ்​மாக் நிர்​வாகம் திட்​ட​மிட்​டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்​படி, சாதாரண மற்​றும் நடுத்தர வகை வெளி​நாட்டு மது​பானங்​கள் மற்​றும் பீர் உள்​ளிட்​ட​வற்​றின் விலையை ரூ.10 முதல் ரூ.50 வரை உயருகிறது. இந்​திய தயாரிப்பு வெளி​நாட்டு மது​பானங்​கள் மற்​றும் பீர் தயாரிக்​கும் நிறு​வனங்​களுக்கு உற்​பத்தி செய்​யப்​படும் ஒவ்​வொரு பெட்​டிக்​கும் கூடு​தல் கட்​ட​ணம் நிர்ணயித்​தது.

45
டாஸ்​மாக் நிர்​வாகக் குழுக் கூட்​டம்

இதனால் உற்​பத்தி மற்​றும் விநி​யோக செல​வு​கள் அதி​கரித்​துள்​ள​தாக கூறி, மது​பான ஆலை மற்​றும் பீர் உற்​பத்​தி​யாளர்​கள் சில்​லறை விலையை உயர்த்​து​மாறு அரசிடம் கோரிக்கை வைத்​தனர். ஆனால் இதை அரசு உடனடியாக ஏற்​க​வில்லை என்​றாலும், இந்த விவ​காரம் டாஸ்​மாக் நிர்​வாகக் குழுக் கூட்​டத்​தில் விவாதிக்​கப்​பட்டது. இருப்பினும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

55
விலை எப்போது உயர்கிறது?

இந்த விலை உயர்வு குறித்து இன்று அல்​லது நாளை மீண்​டும் உயர்​மட்ட ஆலோ​சனை நடத்தி அறி​விப்பு வெளியாகும். தமிழகத்​தில் கடைசி​யாக கடந்த 2024 பிப்​ர​வரி 1-ம் தேதி மதுபான விலை உயர்த்​தப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

Read more Photos on
click me!

Recommended Stories