அதிமுக டூ பாஜக.! மாநில தலைவராகும் நயினார் நாகேந்திரன்- யார் இவர்.?

Published : Apr 11, 2025, 03:23 PM ISTUpdated : Apr 11, 2025, 05:29 PM IST

அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த நயினார் நாகேந்திரன், தமிழக பாஜகவின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும், பாஜக சட்டமன்ற தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

PREV
14
அதிமுக டூ பாஜக.! மாநில தலைவராகும் நயினார் நாகேந்திரன்- யார் இவர்.?

Who is Nainar Nagendran : தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுகவில் தென்மாவட்டங்களில் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தவர். இதன் காரணமாகவே நெல்லை தொகுதியில் அடுத்தடுத்து போட்டியிட வாய்ப்பு வழங்கினார்.

அதனை மெய்பிக்கும் வகையில் 2001 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பொறுப்பு வகித்தார். மேலும் . 2001-2006 வரை நடைபெற்ற அதிமுக  ஆட்சியில் தொழில்துறை அமைச்சராகவும், மின்சாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

24
Nainar Nagendran

அதிமுகவில் அமைச்சர் பொறுப்பு

இதனையடுத்து 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் லட்சுமணிடம் 601 வாக்குகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அடுத்த சில மாதங்களில் ஜெயலலிதா மறைவால் அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நீடித்த நிலையில் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் பாஜகவின் பலம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு பாஜக சார்பாக ராமநாதபுரம் தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். ஆனால் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியிடம் தோல்வி அடைந்தார். 

34
Nainar Nagendran

எம்,பி. எம்எல்ஏ தேர்தலில் போட்டி

இதனையடுத்து  2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணியில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார். பாஜக சார்பாக 4 பேர் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், நயினார் நாகேந்திரன் ஏற்கனவே அமைச்சராக இருந்த காரணத்தால் தமிழக சட்டமன்றத்தில் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். தனது அமைதியான பேச்சின் காரணமாக அனைவர் மத்தியிலும் நல்ல பெயர் பெற்றுள்ளார். 

44
TN BJP President Nainar Nagendran

பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்

இந்த நிலையில் தான் பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலையின் பதவி காலம் முடிவடைந்துள்ள நிலையில், புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று ஒருமனதாக தேர்வாக இருக்கிறார். அந்த வகையில் இன்று நடைபெற்ற விருப்ப மனு தாக்கலின் போது நயினார் நாகேந்திரன் மட்டும் தலைவர் பொறுப்பிற்கு விருப்பமனுவை செலுத்தியுள்ளார்.

மேலும் 10 ஆண்டுகள் பாஜகவில் நீடித்திருக்க வேண்டும் என்ற விதியானது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். எனவே தமிழக பாஜகவின் 13வது தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வாகியுள்ளார். 

 

Read more Photos on
click me!

Recommended Stories