Arul Vignesh : தேர்தலில் த்ரில் வெற்றி பெற்று MLA ஆனவர்... யார் இந்த அருள் விக்னேஷ்? சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Published : Nov 28, 2026, 08:49 AM IST

Kallakurichi TVK MLA Arul Vignesh : பெண் ஆட்சியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைதாகி சிறையில் இருக்கும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் பின்னணி பற்றி இங்கே பார்க்கலாம்.

PREV
14
யார் இந்த அருள் விக்னேஷ்?

கடந்த 1991ஆம் ஆண்டு பிறந்த சி. அருள் விக்னேஷின் சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியத்தில் அமைந்துள்ள மூங்கில்பாடி கிராமம். இவரது பெற்றோர் சின்னையா மற்றும் லட்சுமி. கள்ளக்குறிச்சியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், உயர்கல்விக்காக திருச்சியில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, 2012ஆம் ஆண்டு எம்.எஸ்.சி பட்டம் பெற்றார். இவரது மனைவி சிவசங்கரி. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். அரசியலில் நுழைவதற்கு முன்பாக கள்ளக்குறிச்சியில் டென்னிஸ் விளையாட்டு மைதானம் ஒன்றை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

TVK MLA-க்களுக்கு ரூ.15 கோடி பேரம்: அதிமுக, திமுக மீது தவெக எம்.எல்.ஏ வைத்த குதிரை பேர குற்றச்சாட்டால் பரபரப்பு

24
அருள் விக்னேஷ் சொத்து மதிப்பு எவ்வளவு?

2026ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது இவர் தாக்கல் செய்த வேட்புமனு பிரமாணப் பத்திரத்தின்படி, அப்போது அருள் விக்னேஷ் மீது எந்தவொரு குற்ற வழக்கும் நிலுவையில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி தனக்கு ஒன்றரை கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருப்பதாகவும், அதில் 43 லட்சம் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் அருள் விக்னேஷ். கள்ளக்குறிச்சியில் பல சீனியர்கள் இருந்தும், இவருக்கு விஜய் சீட் கொடுத்ததற்கு காரணம் அவருடைய பொருளாதார பலம்தான் என கூறப்படுகிறது.

Arul Vignesh Arrest: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது!

34
தவெகவில் இணைந்தது முதல் எம்எல்ஏவானது வரை!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியபோது அக்கட்சியில் இணைந்த அருள் விக்னேஷுக்கு, மாவட்ட மாணவரணி பொறுப்பு வழங்கப்பட்டது. கட்சியில் தொடர்ந்து செயல்பட்டு வந்த இவருக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தேர்தலில் அருள் விக்னேஷ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ். ராஜீவ் காந்தியை 798 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன்மூலம் தனது முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.

தவெக எம்.எல்.ஏ-வுக்கு நெருக்கடி? ஆட்சியர் புகார்.. சட்ட நடவடிக்கை கோரும் மாணிக்கம் தாகூர்!

44
அருள் விக்னேஷ் கைது

ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று சில மாதங்களே ஆன நிலையில், தற்போது அவர் மீது எழுந்துள்ள புகார்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளன. பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் சிக்கிய அருள் விக்னேஷ் மீது தற்போது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர் தற்போது கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். விஜய் ஆட்சியில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

Kanimozhi Slams Vijay : தவெக எம்.எல்.ஏ விவகாரம்..முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா? கனிமொழி சரமாரி கேள்வி

Read more Photos on
click me!

Recommended Stories