TN to shut down 500 liquor shops: இன்று எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடல்? முழு விவரம் இதோ.!

Published : Jun 22, 2023, 11:00 AM IST

தமிழகத்தில எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது என்ற முழு விவரத்தை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

PREV
14
TN to shut down 500 liquor shops: இன்று எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடல்? முழு விவரம் இதோ.!

தமிழகத்தில் மது விற்பனையால் இளைய சமுதாயம் சீரழிந்து வருவதாலும், விதவை பெண்கள் அதிகரிப்பதாலும் தமிழகத்தில் மது விலக்கை அமல் படுத்த வேண்டும் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். 

24

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 5,329 டாஸ்மாக் மதுக்கடைகளில் 500 கடைகள்  மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். இதற்கான பணிகளை டாஸ்மாக் நிறுவனம் கடந்த மாதம் தொடங்கியது.

34

அதனை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள 500 சில்லறை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு அவற்றை இன்று முதல் மூடப்படும் என தமிழக அரசு  அறிவித்துள்ளது. இந்நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை கடைகள் மூடப்படுகிறது என்ற விவரத்தை டாஸ்டாக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

44

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடல்

சென்னை மாவட்டத்தில் 61, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 31, திருவள்ளூர் மாவட்டத்தில் 46, கோவை மாவட்டத்தில் 20, திருப்பூர் மாவட்டத்தில் 24, ஈரோடு மாவட்டத்தில் 24, மதுரை மாவட்டத்தில் 21, விழுப்புரம் மாவட்டத்தில் 21, நாமக்கல் மாவட்டத்தில் 18, விருதுநகர் மாவட்டத்தில் 17, சேலம் மாவட்டத்தில் 17, தூத்துக்குடி மாவட்டத்தில் 16, திருச்சி மாவட்டத்தில் 16, திண்டுக்கல் மாவட்டத்தில் 15, தஞ்சாவூர் மாவட்டத்தில் 15, சிவகங்கை மாவட்டத்தில் 14, நெல்லை மாவட்டத்தில் 13, கன்னியாகுமரி மாவட்டத்தில் 12, புதுக்கோட்டை மாவட்டத்தில் 12, கடலூர் மாவட்டத்தில் 11, திருவாரூர் மாவட்டத்தில் 10, தேனி மாவட்டத்தில் 9, ராமநாதபுரம் மாவட்டத்தில் 8, வேலூர் மாவட்டத்தில் 8, திருவண்ணாமலை மாவட்டத்தில் 8, பெரம்பலூர் மாவட்டத்தில் 8, கரூர் மாவட்டத்தில் 7, நாகப்பட்டினம் மாவட்டம் 7, தருமபுரி மாவட்டத்தில் 4, நீலகிரி மாவட்டத்தில் 3, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 மொத்தம் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.  

Read more Photos on
click me!

Recommended Stories