சென்னையில், மழைநீர் வடிகால் பணி நடைபெறுவதால் பிரகாசம் சாலையில் (பிரட்வே சாலை) என். எஸ். சி போஸ் சாலை சந்திப்பு முதல் தாதா முத்தியப்பன் தெரு சந்திப்பு வரையிலான பகுதி தற்காலிகமாக ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது. இதன்படி என். எஸ். சி போஸ் சாலையில் (பிராட்வே சந்திப்பு) இருந்து பிரகாசம் சாலை வழியாக ஸ்டான்லி ரவுண்டானா நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் 22. 06. 2023 முதல் 05. 08. 2023 வரை தடை செய்யப்படுகிறது.