Chennai Rain !நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கும் கனமழை.. சென்னை உள்ளிட்ட 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.!

Published : Jun 19, 2023, 06:55 AM ISTUpdated : Jun 19, 2023, 08:49 AM IST

Chennai School Holiday Due to Heavy Rain : சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
15
Chennai Rain !நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கும் கனமழை.. சென்னை உள்ளிட்ட 6 மாவட்ட பள்ளிகளுக்கு  இன்று விடுமுறை.!
Chennai Weather Update

சென்னையில் கத்திரி வெயில் நிறைவடைந்த பிறகும் கடந்த 20 நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இதனால், பகல் நேரங்களில் வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்த்து வந்தனர். வெயிலின் தாக்கம் 2நாட்களாக குறைந்த போதிலும் புழுக்கம் காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகினர். 

25
School Holidays in Chennai

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

35
Chennai Heavy Rainfall

அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை லேசான மழை பெய்ய தொடங்கியது. மதியம் வரை மழை நீடித்தது. இதனால் சென்னை நகரே குளிர்ந்து போனது. இந்நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், போரூர், மயிலாப்பூர், வேப்பேரி, அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

45
Power Cut Due to Heavy Rain

மெரினா கடற்கரை காமராஜ் சாலையில் இரும்புத் தகடுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. மெரினா நொச்சிக்குப்பம், டுமிங்குப்பம் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பலத்த காற்றால் சாலையில் மரம் விழுந்துள்ளன. 

55
Chennai Rain News

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் கனமழைபெய்து வருவதால் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories