Northeast Monsoon
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து சென்னை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித் தீர்த்தது. தற்போது உருவான ஃபெஞ்சல் புயல் சென்னையை தவிர்த்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை பெய்து பொதுமக்களுக்கு மரண பயணத்தை காட்டியது. இதனால் விசாயிகளின் விளை நிலங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி நாசமானதால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
tamilnadu rain
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் 06 முதல் 10ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Arabian Sea
அரபிக்கடல் பகுதிகள்:
இன்று லட்சத்தீவு பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
Rain News
நாளை தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகள், அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல் 6ம் தேதி தெற்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.