Magalir Urimai Thogai: ரூ.1000 இனி கிடையாது? விஜய்யின் ரூ.2500 திட்டம் எப்போது அமலாகும்? மகளிர் உரிமைத் தொகை லேட்டஸ்ட் அப்டேட்!

Published : May 09, 2026, 11:08 AM IST

Magalir Urimai Thogai: தமிழகத்தில் புதிய அரசு அமைவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், மகளிர் உரிமைத் தொகை, ஓய்வூதியம் போன்ற மாதாந்திர நலத்திட்டங்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. வழக்கமாக 15ம் தேதி வழங்கப்படும் இந்த தொகை இந்த மாதம் கிடைப்பது கடினம்

PREV
15
மகளிர் உரிமைத் தொகை

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் 15ம் தேதி அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000, கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ.2000 என மொத்தம் ரூ.5000 அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

25
மகளிர் உரிமைத் தொகை 15ம் தேதி கிடைக்குமா?

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இந்த சூழலில், கோடிக்கணக்கான மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மகளிர் உரிமைத் தொகை, தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் இந்த மாதம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

35
விஜய் தலைமையில் ஆட்சி

சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள 'தமிழக வெற்றிக் கழகம்', ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை அடைய இன்னும் இரண்டு இடங்கள் தேவைப்படுகின்றன. விடுதலை சிறுத்தைகள் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் தவெக பெருபான்மையுடன் ஆட்சி அமைக்கும். மற்றொரு புறம் எதிர் எதிர் துருவங்களாக இருந்து வரும் அதிமுக, திமுக இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுக தலைமையில் கண்டிப்பாக ஆட்சி அமையும் என அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

45
பணம் கிடைப்பது கடினம்

பொதுவாக அரசுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஒவ்வொரு மாதமும் அந்தந்த அமைச்சகங்களின் ஒப்புதலோடு நடைபெறும். தற்போது பழைய அமைச்சரவை கலைக்கப்பட்டுவிட்டது. புதிய முதலமைச்சர் இன்னும் பதவியேற்காததால், கோப்புகளில் கையெழுத்திட்டு நிதியை விடுவிக்க அதிகாரப்பூர்வமான 'அரசுத் தலைமை' இல்லை. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வங்கி கணக்கில் வந்து சேரும். ஆனால், தற்போது அரசு இயந்திரம் தற்காலிகமாக முடங்கியுள்ளதால், இந்த தேதிக்குள் பணம் கிடைப்பது கடினம் என்றே கூறப்படுகிறது.

55
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடருமா என்ற கேள்விக்கு மத்தியில், ஒரு முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் தனது தேர்தல் பிரசாரத்தின் போது, தவெக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும்" என உறுதியளித்திருந்தார். இதனால், முந்தைய அரசு வழங்கிய ரூ.1,000 திட்டத்தை அப்படியே தொடர்வதை விட, அதைத் தனது புதிய வாக்குறுதிப்படி ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கவே அவர் விரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மாநிலத்தின் நிதிநிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவாரா அல்லது சில மாதங்கள் அவகாசம் எடுத்துக் கொள்வாரா என்பது அவர் முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னரே தெளிவாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories