நள்ளிரவில் ஆளுநர் மாளிகையில் பதறிய TTV.தினகரன்.. அமமுக எம்எல்ஏ மிஸ்சிங்.. தவெக வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

Published : May 09, 2026, 08:04 AM IST

ஆட்சியமைக்க பெரும்பான்மை இன்றி தவெக திணறி வரும் நிலையில், அமமுக எம்.எல்.ஏ.வின் ஆதரவுக் கடிதம் போலியானது என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அமமுக எம்எல்ஏ சுயநினைவுடன் கடிதத்தில் கையெழுத்திட்டதாக தவெக தரப்பு வீடியோ.

PREV
15
பெரும்பான்மை இல்லாத தவெக

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திணறி வருகிறார். இதுவரை 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த 4 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்ததை அடுத்து எண்ணிக்கை 117 உயர்ந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் தவெகவின் பலம் 119ஆக அதிகரிக்கும்.

25
விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல்

எனினும், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்வது, தற்காலிக சபாநாயகர் ஆகியவற்றால் 2 எண்ணிக்கை குறைந்து தவெகவிடம் 117 என்ற எண்ணிக்கையே இருக்கும். பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதலாக ஒரு எம்எல்ஏவின் ஆதரவு தேவைப்படும். இதனால் விஜய் ஆட்சியமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

35
டிடிவி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்நிலையில், நள்ளிரவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை சந்தித்து பேசினார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்க ஆதரவளிப்பதாக மன்னார்குடி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் கடிதம் அளித்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்: அமமுக எம்எல்ஏ ஆதரவு எங்களுக்கு இருக்கும் போது தவெக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அமமுக எம்எல்ஏ காமராஜை காணவில்லை. அவர் விலை போய் இருக்கலாம் என்றார். தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

45
குதிரை பேரத்தில் தவெக

இந்த சூழலில் காணவில்லை என்று சொன்ன அமமுக எம்எல்ஏ எஸ்.காமராஜ் ஆளுநர் மாளிகைக்கு வருதை தந்தார். இதனை தொடர்ந்து, இரண்டாவது முறையாக டிடிவி. தினகரன் ஆளுநரை சந்தித்தார். பின்னர் இருவரும் சேர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: ஆளுநரிடம் கொடுத்த கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை. அந்த கடிதம் போலியானது. எங்கள் நிர்வாகி பெயரில் போலி கடிதத்தை தவெகவினர் ஆளுநர் மாளிகை்கு அனுப்பி உள்ளனர். தூயசக்தி செய்யும் வேலையா இது தவெக தூய சக்தி கிடையாது மோசடி சக்தி. திமுகவின் கோட்டையான மன்னார்குடியில், நாங்கள் உழைத்து, போராடி வெற்றி பெற்றுள்ளோம். ஒரேயொரு எம்எல்ஏ எங்களிடம் உள்ளார். அதனால், கட்சி தாவல் தடை சட்டம் செல்லாது என்று இதுபோன்று செயல்படுகிறார்கள் என்றார். இது தொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் டிடிவி.தினகரன் புகார் அளித்துள்ளார். இதேபோல் அமமுக எம்எல்ஏ காமராஜும், நான் அதிமுகவையே ஆதரிக்கிறேன். கடிதத்தில் உள்ளது என்னுடைய கையெழுத்து இல்லை என்று மறுத்தார்.

55
தவெக வெளியிட்ட வீடியோ

இந்த குற்றச்சாட்டு தவெக தரப்பில் வீடியோ ஆதாரத்துடன் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அமமுக எம்எல்ஏ சுய நினைவுடன்தான் கடிதம் கொடுத்துள்ளார். அமமுக பொதுச்செயலாளரின் ஒப்புதலுடன், அவர் தன்னிச்சையாக மற்றும் மகிழ்ச்சியுடன் தவெகவுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கடிதம் எழுதினார். பேரம் பேச வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. அந்த வீடியோவில் காரில் அமர்ந்தபடி கடிதத்தில், காமராஜ் கையெழுத்திடும் காட்சிகள் உள்ளன. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories