காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ 33 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லரை வணிகத்தில் 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 50 ரூபாய்க்கு சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிலோ 60 வரைக்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 75 ரூபாய், சில்லறை வணிகத்தில் 90 ரூபாய் வரை விற்பனையாகிறது. பீட்ரூட் ஒரு கிலோ 29 ரூபாயும் சில்லறை வணிகத்தில் 35 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. உருளைக்கிழங்கு ஒரு கிலோ 26 ரூபாயும், சில்லறை வணிகத்தில் 33 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சில்லரை வர்த்தக விலை என்ன.?
பாகற்காய் ஒரு கிலோ 32 ரூபாயும், சில்லறை வணிகத்தில் 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சுரைக்காய் ஒரு கிலோ 27 ருபாயும் சில்லறை வணிகத்தில் 34 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாயும் சில்லறை வணிகத்தில் 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பட்டர்பின்ஸ் ஒரு கிலோ 49 ரூபாயும், சில்லறை வணிகத்தில் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குடைமிளகாய் ஒரு கிலோ 43 ரூபாயில் சில்லறை விண்ணகத்தில் 55 வரை விற்பனை ஆகிறது.
கத்தரிக்காய் விலை என்ன.?
மொத்த வியாபாரத்தில் முட்டைக் கோஸ் ஒரு கிலோ 28 ரூபாயும், சில்லறை வணிகத்தில் 35 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கேரட் ஒரு கிலோ 39 ரூபாயும் சில்லரை வணிகத்தில் 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மொத்த வியாபாரத்தில் முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாயும் சில்லறை வணிகத்தில் 50 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கத்தரிக்காய் ஒரு கிலோ 26 ரூபாயும், பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாயும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பீன்ஸ் ஒரு கிலோ 45 ரூபாயும் சில்லறை வணிகத்தில் 55 வரை விற்பனை ஆகிறது.
Vegetables
இஞ்சியின் விலை என்ன.?
இஞ்சின் விலையானது தரத்தை பொறுத்து மாறுபடுகிறது அந்த வகையில் 100 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. தக்காளியை பொருத்தவரை கடந்த சில நாட்களாக விலையானது வீழ்ச்சி அடைந்து வந்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி விலை ஒரு கிலோ 19 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் 25 ரூபாய் வரை விற்பனை ஆகிறது