vegetable price hike
கத்திரிக்காய் விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறிகள் சந்தையில் தக்காளி விலையானது குறைந்தபட்சமாக 25 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 34 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 40 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் குறைந்தபட்சமாக 20 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 28 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 45 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
vegetables
கேரட் விலை நிலவரம்.?
முட்டைக்கோஸ் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 130 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், குடை மிளகாய் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பீட்ரூட் விலை என்ன தெரியுமா.?
வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாங்காய் விலை என்ன.?
பச்சை மிளகாய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், எலுமிச்சை ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.