காய்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்ததா.? கோயம்பேட்டில் தக்காளி, வெண்டை, அவரைக்காய் விலை நிலவரம் என்ன.?

First Published | Jan 12, 2024, 8:17 AM IST

பொங்கல் பண்டிகையையொட்டி காய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை விலையானது சற்று அதிகரித்துள்ளது. 

தக்காளி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,  பீட்ரூட் 1 கிலோ 40 ரூபாய்க்கும்,  பச்சை மிளகாய் 35 ரூபாய்க்கும்,  தக்காளி ஒரு கிலோ 28 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

அவரைக்காய் விலை என்ன.?

குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் 65ரூபாய்க்கும்,  அவரைக்காய் ஒரு 70 ரூபாய்க்கும்,  முட்டைக்கோஸ் ஒரு கிலோ 8 ரூபாய்க்கும்,  கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
 

Latest Videos


முருங்கைக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும்,  முருங்கைக்காய் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும்,  கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

வெண்டைக்காய் விலை என்ன.?

புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,  பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  முள்ளங்கி ஒரு கிலோ 25க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்க்உம்,  மாங்காய் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும்,  இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும்,  பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்

Transport Workers: 1,12,675 அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு..!

click me!