அடுத்தடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை.. இன்று முதல். போக்குவரத்து வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

Published : Mar 06, 2026, 07:49 AM IST

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
15
சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு

தமிழகத்தில் சுப முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களில் போதிய பேருந்து கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். போதிய பேருந்து இயக்காததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வார இறுதி நாட்கள், சுப முகூர்த்தம், தொடர் விடுமுறை, பவுர்ணமி, அமாவாசை மற்றும் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் மற்ற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

25
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: இன்று மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நேற்றைய தினம் 190 பேருந்துகள் இயக்கப்பட்டன.

35
கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் பேருந்து

இன்றைய தினம், 310 பேருந்துகளும், நாளை சனிக்கிழமை 325 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நேற்று 55 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இன்று மற்றும் நாளை தலா 55 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதேபோல், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

45
மாதவரம் பேருந்து நிலையம்

மாதவரத்திலிருந்து இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு தலா 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்றைய தினம் பயணம் மேற்கொள்ள 10,728 பயணிகளும், நாளை சனிக்கிழமை 4,598 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 11,065 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

55
முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தல்

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்கிறோம். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories