‘‘2021 சட்டமன்ற தேர்தலைப் போலவே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும். கூடுதலாக ஒரு சீட்டு கூட தர முடியாது. ஆட்சியிலும் பங்கு தர முடியாது’’ என காங்கிரஸ் கட்சியிடம் திமுக தரப்பு உறுதியாக கூறி விட்டதாக தகவல்கள். அதேபோல் விடுதலை சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்கள், மதிமுகவிற்கும் கூடுதல் சீட்டு வழங்க திமுக ஆர்வம் காட்டவில்லை என்றும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் தற்போது வரை காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் நீடித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிகள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் சூடு பிடித்துள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி வேணுகோபால் திமுக தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். குறிப்பாக இந்த முறை காங்கிரஸ் கட்சி 2021 சட்டசபை தேர்தலை விட, அதிக இடங்களில் களமிறங்குவது அல்லது ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற திட்டமிட்டுள்ளது. ஆனால் திமுக தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கூடுதல் இடங்களை வழங்க தயங்குகிறது.