இபிஎஸ்-யை கடவுளாக பார்க்கும் விஜய் ரசிகர்கள்..! நன்றி சார் என ட்விட் போட்டு கண்ணீர்

Published : Sep 28, 2025, 11:05 AM IST

கரூரில் நடந்த தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

PREV
15
எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி கூறும் விஜய் ரசிகர்கள்

கரூரில் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பலர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில், குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். உடனடியாக ஆம்புலன்சுகள் மூலம் அவர்களை கரூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் 39 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

25
கரூர் நெரிசல் சம்பவம்

உயிரிழந்தவர்களில் ஆண்கள் 13, பெண்கள் 17, ஆண் குழந்தைகள் 4, பெண் குழந்தைகள் 5 பேர் உள்ளனர். இதில் ஒரு பெண்ணின் உடல் மட்டும் அடையாளம் காணப்படவில்லை. கரூர் பகுதியில் மட்டும் 27 பேர் உயிரிழந்தனர். இந்த பரிதாப சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

35
எடப்பாடி பழனிசாமி பேட்டி

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுக்கூட்டத்தில் எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை முன்னதாகவே கணக்கிட்டு செயல்படும் அரசு ஆனது ஆலோசித்து, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். கூட்டம் நடக்கும் போது இடையில் ஆம்புலன்சுகள் வருவது போன்ற சூழ்நிலை மக்கள் மனதில் சந்தேகங்களை கிளப்புகிறது.

45
கரூர் சம்பவம் குறித்து இபிஎஸ்

இந்த நெரிசலில் மின்சார விளக்குகள் அணைந்த நேரத்திலும், கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். பாதுகாப்பு குறைபாடுகள் தெளிவாக தொலைக்காட்சிகளில் தெரிகின்றன. முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். முன்பே நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பாதுகாப்பு முழுமையாக இருந்திருந்தால், இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க முடிந்திருக்கும்.

55
நன்றி கூறும் தவெக தொண்டர்கள்

ஒரு அரசியல் கட்சி நடத்தும் கூட்டத்தில் மக்கள் அரசாங்கத்தையும் காவல்துறையையும் நம்பி கலந்து கொள்கிறார்கள் அளிக்கப்பட வேண்டும். அனைத்து முன்னெச்சரிப்புகளும் எடுக்கப்பட்டிருந்தால் இந்த கொடுமையை தவிர்க்க முடியும். இவ்வளவு உயிர்களை இழந்தது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது” என்று கூறி தவெக தரப்பு நியாயத்தை பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு விஜய் ரசிகர்கள் நன்றி இபிஎஸ் சார் என்று பதிவிட்டு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories