தவெக தலைவர் விஜய் மீது செருப்பு வீச்சு... கரூரில் பரபரப்பு..!

Published : Sep 27, 2025, 11:14 PM IST

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டபோது அவர்மீது செருப்பு வீசப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

PREV
Slipper Thrown on TVK Vijay

தமிழகத்தின் கரூரில் சனிக்கிழமை மாலை தவெக தலைவரும், நடிகருமான விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர், 58 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். விஜய் பேரணியில் திரண்டிருந்த பெருங்கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால், பீதி ஏற்பட்டு நெரிசல் உருவானது. கூட்டத்தில் பங்கேற்ற பலர் மயங்கி விழுந்த நிலையில், அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். கூட்டம் நடந்த இடத்தில் ஏற்பட்ட அதிகப்படியான கூட்டமே இந்த சோகத்திற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிலைமையை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்திக்கவும் கரூர் வரவுள்ளதாகக் கூறினார். காயமடைந்தவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்றும், தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் வழங்க வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விஜய் மீது செருப்பு வீச்சு

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டபோது அவர்மீது செருப்பு வீசப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் மக்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஒரு செருப்பு விஜய்யை நோக்கி பறந்து வந்த நிலையில், விஜய்யை சுற்றி இருந்த பாதுகாவலர்கள், அந்த செருப்பு விஜய் மீது விழாமல் தள்ளிவிட்டனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள், தளபதி மீது ஏன் இவ்வளவு வன்மம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories