தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் அறிவித்த வாக்குறுதிகளில், இல்லத்தரசிகளை நேரடியாகச் சென்றடைந்தது இந்த சிலிண்டர் திட்டம்தான். இப்போது எரிவாயு விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு இது ஒரு பெரிய நிம்மதியாக இருக்கும்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. தவெக மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றால் அவரது 'முதல் கையெழுத்து' என்னவாக இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் கவனம் ஈர்த்த 'ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம்' என்ற அறிவிப்பு, அவர் சி.எம் ஆனதும் கையெழுத்திடும் முதல் கோப்பாக இருக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
23
ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம்
தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் அறிவித்த வாக்குறுதிகளில், இல்லத்தரசிகளை நேரடியாகச் சென்றடைந்தது இந்த சிலிண்டர் திட்டம்தான். இப்போது எரிவாயு விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு இது ஒரு பெரிய நிம்மதியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அரசியல் களத்தில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க விரும்புவதால், தனது முதல் கையெழுத்தாக ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர் திட்டம் அல்லது மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கும் திட்டத்தையே அவர் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
33
பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.10,000 வரை உதவித்தொகை
தவெக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான திட்டங்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கான திட்டங்கள் இடம்பெற்று இருந்தன. அதாவது ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவியாக 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுச் சேலை. குழந்தை பிறப்பு: பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக சிறப்புச் சேமிப்புத் திட்டங்கள். பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.10,000 வரை உதவித்தொகை. புதிய தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கு வட்டி இல்லா கடன் வசதி. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) அமைச்சகம் உருவாக்கப்படும் என்ற திட்டங்கள் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டு இருந்தன.
கூட்டணி ஆட்சி
மேலும் சிறு மற்றும் குறு விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் சீரான குடிநீர் விநியோகம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உலகத் தரத்திலான கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என ஏராளமான வாக்குறுதிகளையும் மக்களுக்கு விஜய் கொடுத்திருந்தார். இப்போதைய நிலவரப்படி விஜய் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார். ஒருவேளை கூட்டணி ஆட்சி அமைந்தால் தனது 'நேர்மையான நிர்வாகம்' என்ற கொள்கையை விட்டுக் கொடுக்காமல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் விஜய் உறுதியாக இருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.