காலேஜுக்கு போறேனு சொல்லி! விஜய்யை பார்க்க போய் இப்போ ICU-ல் படுத்திருக்கான்! விக்னேஷின் தந்தை கதறல்!

Published : Mar 04, 2026, 05:56 PM IST

Accident: கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு தான் சென்றார். ஆனால் என்னுடைய நண்பரின் வாகனத்தை வாங்கி கொண்டு விஜயை பார்ப்பதற்காக சென்றது எனக்கு தெரியாது.

PREV
14
தவெக தலைவர் விஜய்

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கரூர் சம்பவத்தை அடுத்து தவெக தலைவர் விஜய் கட்சி மாவட்ட வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை மட்டும் நடத்தி வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாகக் கூட்டம் நடைபெறும் செங்கிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

24
விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்

அப்போது, விஜயை பார்க்க அவலுடன் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பின்தொடர்ந்து வந்த போது விபத்தில் சிக்கினர். அதாவது திருச்சி கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் விக்னேஷ் (20) மற்றும் அவரது நண்பர் அருண் விஜயை பின்தொடர்ந்து சென்ற போது முன்னாள் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விக்னேஷ்க்கு தலையில் படுத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியூசில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். அவரது நண்பருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

34
விக்னேஷின் தந்தை பாண்டியன்

விபத்தில் சிக்கிய விக்னேஷின் தந்தை பாண்டியன் கூறுகையில்: என்னுடைய இரட்டை மகன்களில் ஒருவர்தான் விக்னேஷ். கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு தான் சென்றார். ஆனால் என்னுடைய நண்பரின் வாகனத்தை வாங்கி கொண்டு விஜயை பார்ப்பதற்காக சென்றது எனக்கு தெரியாது. கல்லூரிக்கு சென்றிருக்கிறான் என்றுதான் விட்டு விட்டோம். ஆனால் திடீரென என்னுடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு உங்கள் மகன் விஜயை பார்க்க சென்று விபத்தில் சிக்கிக்கொண்டார். அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம் என தெரிவித்தனர். அதனை கேட்டு இங்கு வந்தோம் என்றார்.

44
மகனை பார்க்கவும் விடவில்லை

மேலும் பேசிய அவர் கல்லூரி நிர்வாகம் என்னுடைய மகன் கல்லூரிக்கு வரவில்லை என்பதை முறைப்படி எனக்கு தெரிவித்திருக்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் என்னுடைய மகனின் நிலைமை எப்படி இருக்கிறது என்று என்னிடம் சொல்ல மறுக்கின்றனர். பார்க்கவும் விடவில்லை என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories