டிட்வா புயலானது வங்கக் கடலில் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 50 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலை கொண்டிருக்கும் நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் கிண்டி, வேளச்சேரி, அண்ணாநகர், போரூர், ராமாபுரம், தாம்பரம், அம்பத்தூர் மற்றும் புறநகரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடற்கரைப் பகுதிகளுக்கோ கடலுக்கோ செல்ல வேண்டாம் என டெல்டா வெதர்மேன் அறிவுறுத்தியுள்ளார்.