தமிழகத்தை உலுக்கிய பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை! சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை! அதுமட்டுமல்ல!

Published : Feb 19, 2025, 08:16 AM ISTUpdated : Feb 19, 2025, 08:28 AM IST

வேலூரில் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

PREV
15
தமிழகத்தை உலுக்கிய பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை! சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை! அதுமட்டுமல்ல!
தமிழகத்தை உலுக்கிய பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு! சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை! அதுமட்டுமல்ல!

வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் மருத்துவர். இவர் தனது ஆண் நண்பருடன் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி சினிமா பார்க்க இரவு நேர காட்சிக்கு சென்றுள்ளார். பிறகு, சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக அங்கு நின்ற போது அவ்வழியாக வந்த ஆட்டோவில் இருவரும் ஏறியுள்ளனர். அந்த ஆட்டோவில் ஏற்கனவே ஆட்டோ ஓட்டுநர் உட்பட 5 பேர் பயணித்துள்ளனர்.  

25
வேலூர் க்ரைம் நியூஸ்

வேலூர் புதிய பேருந்து நிலையம் வரை வந்த ஆட்டோ திடீரென இடது புறம் திரும்பி மருத்துவமனைக்கு செல்லாமல் பாலாற்றை நோக்கி சென்றது. இதனை அறிந்த 
அந்த பெண், தன் ஆண் நண்பரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர் ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்கும் முன்னரே, இருவரின் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர்.  அப்போது தான் தெரிந்தது இவர்கள் அனைவரும் ஒரே கும்பல் என்பது. 

இதையும் படிங்க: தமிழகமே அதிர்ச்சி! 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 7 கல்லூரி மாணவர்கள்! கொதிக்கும் அண்ணாமலை!

35
பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம்

பின்னர் ஆண் நண்பரை சரமாரியாக தாக்கிவிட்டு இளம்பெண்ணை மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவர்களிடமிருந்து பணம் ரூ. 40,000 மற்றும் நகை, செல்போனை ஆகிவற்றையும் பறித்துக்கொண்டனர். பின்னர் அந்த கும்பல் இருவரையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பித்தனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் சொந்த மாநிலமான பீகார் சென்று அங்கிருந்து வேலூர் எஸ்.பி.யின் மின்னஞ்சல் முகவரிக்குப் புகார் அனுப்பினார்.

45
வேலூர் மகளிர் விரைவு நீதிமன்றம்

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்துவாச்சாரி வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன்(20), மணிகண்டன் (21), பரத், சந்தோஷ்குமார் (22) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 5 பேரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு, மகளிர் நீதிமன்றத்திலிருந்து மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து நீதிபதி மகேஸ்வரி பானு ரேகா ஜனவரி 30ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். 

55
20 ஆண்டு சிறைத்தண்டனை

இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பார்த்திபன், பரத்,சந்தோஷ் குமார் ,மணிகண்டன் ஆகிய நான்கு பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான சிறுவனுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.23,000 அபராதம் விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

click me!

Recommended Stories