Vegetables Price List Today : தக்காளி, இஞ்சி விலை என்ன ? கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கூடியதா.? குறைந்ததா.

Published : Sep 04, 2023, 08:13 AM IST

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையானது ஏறி, இறங்கி வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினத்தை விட இன்று காய்கறி விலை சற்று அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. 

PREV
13
Vegetables Price List Today : தக்காளி, இஞ்சி விலை என்ன ? கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கூடியதா.? குறைந்ததா.
Onion price

காய்கறி விலை என்ன.?

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. காய்கறிகளின் வரத்தை பொறுப்பு விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாயும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது,

பச்சை மிளகாய் பொறுத்தவரை ஒரு கிலோ 35 ரூபாய்க்கு உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு நெல்லிக்காய் ஒரு கிலோ 89 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

23
vegetables

கத்திரிக்காய் விலை என்ன.?

பாகற்காய் ஒரு கிலோ 20 ரூபாய்,  சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,  முட்டைக்கோஸ் ஒரு கிலோ 8 ரூபாய்யும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,  காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொத்தவரங்காய் பொறுத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் குடைமிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

முருங்கைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  பச்சை கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

33

தக்காளி , இஞ்சி விலை ?

தக்காளி விலை கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்து படிப்படியாக குறைந்து ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதேபோல இஞ்சி விலையும் உச்சத்திலேயே இருந்து வருகிறது. ஒரு கிலோ இஞ்சி 200 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தரம் குறைந்த இஞ்சியானது 150 முதல்170 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

click me!

Recommended Stories