ஏப்ரல் மாதம் விடுமுறை
பள்ளி மாணவர்கள் மாதம் தொடங்குவதற்கு முன்னதாக காலண்டரை பார்க்க தொடங்கி விடுவர். எந்தெந்த நாட்களில் அரசு விடுமுறை, எத்தனை நாட்கள் வருகிறது என்பதை பார்ப்பதற்காக. அதன்படி ஏப்ரல் மாதம் தொடக்கத்தின் முதல் நாளே ஏப்ரல் 1 திங்கள் கிழமை வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, ஏப்ரல் 10 வியாழக்கிழமை மகாவீரர் ஜெயந்தி, ஏப்ரல் 14 திங்கள் கிழமை தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 18 வெள்ளிக்கிழமை புனித வெள்ளி ஆகிய நாட்கள் அரசு விடுமுறை தினமாகும். அத்துடன் வார விடுமுறை தினமும் வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.
school holiday jaipur rajasthan
இரண்டு நாட்கள் விடுமுறை
அதன்படி ஏப்ரல் 7ம் தேதி மற்றும் ஏப்ரல் 11ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தென்காசி மாவட்டம் காசி விசுவநாதசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா ஏப்ரல் 7 திங்கள்கிழமை அன்றும், பங்குனி உத்திர திருவிழா ஏப்ரல் 11 வெள்ளிக்கிழமை அன்றும் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏப்ரல் 07 திங்கள்கிழமை மற்றும் ஏப்ரல் 11 வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆஹா! விடுமுறை தொடர்பான அறிவிப்பு வந்தாச்சு! பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் குஷி!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது
மேற்குறிப்பிட்ட நாட்களில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.
Central Government
அரசு அலுவலகங்கள்
மேலும், இம்மாவட்ட கருவூலம், சார்நிலைக் கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பான அவசரப்பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் 26 மற்றும் மே 03 ஆகிய இரு சனிக்கிழமைகளும் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.