நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
தமிழகத்தில் விடுமுறை என்ற வார்த்தையை கேட்டாலே பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் குஷிதான். அதுவும் தொடர் விடுமுறை வந்துவிட்டாலே சொல்ல வேண்டாம். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்துள்ள நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 7-ம் தேதி திங்கட்கிழமை மாலை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிவிப்பில்: புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 7ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல் 19ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகும்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ஏப்ரல் 11ம் விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?
உள்ளூர் விடுமுறை
இந்த உள்ளூர் விடுமுறை 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசு பொதுத் தேர்வுகள்
மேலும் மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள இந்த உள்ளுர் விடுமுறையானது பொருந்தாது.
திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி ஆழிதேரோட்டம் விடுமுறை
ஏற்கனவே திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி ஆழிதேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு இதே ஏப்ரல் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.