Holiday Special Buses: அடுத்தடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை! குஷியில் பள்ளி மாணவர்கள்! சூப்பர் அறிவிப்பு வெளியானது!

Published : Jul 15, 2026, 08:12 AM IST

Holiday: பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே ஒரே கொண்டாட்டம் தான். இந்நிலையில் வார இறுதி நாட்கள் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

PREV
15

விடுமுறை என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். அதன்படி வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள், பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் தமிழக போக்குவரத்துத்துறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயணிகள் சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வார இறுதி நாட்கள் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

25

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: ஜூலை 17 வெள்ளிக்கிழமை, 18 சனிக்கிழமை மற்றும் 19 ஞாயிறுக்கிழமை மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ளே முடிச்சுடுங்க! சென்னையில் முக்கிய இடங்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை!

35

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூலை 17 வெள்ளிக்கிழமை அன்று 395 பேருந்துகளும், 18 (சனிக்கிழமை) 330 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

45

அதேபோல் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஜூலை 17 வெள்ளிக் கிழமை அன்று 120 பேருந்துகளும், 18 சனிக்கிழமை அன்று 120 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து ஜூலை 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 25 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

55

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் ஜூலை 19 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 420 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 4683 பயணிகளும் சனிக்கிழமை 1920 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6059 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க போக்குவரத்து துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories