இந்தப் புகார்களின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வெளிமாநிலத்தில் பதுங்கியிருந்த சரவணனைக் கைது செய்தனர். பின்னர், அவரை புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர்.
சரவணன் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதும், பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. கூடியிருந்தவர்களில் சிலர், "அவனை எங்களிடம் ஒப்படையுங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று ஆவேசமாகக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தினரை சமாதானப்படுத்தி, சரவணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் உறுதியளித்தனர். மேலும், அவரைக் காவலில் எடுத்து விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களில் பலர் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திலேயே தொடர்ந்து முகாமிட்டதால், அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.