அது என்ன நாம ஆட்சிக்கு வந்தா? கட்டாயம் வருவோம்.. மக்கள் என்ன தேர்ந்தெடுப்பாங்க..! விஜய் ஓவர் நம்பிக்கை

Published : Nov 23, 2025, 12:20 PM IST

காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அண்ணா, எம்ஜிஆர் போல மக்களுக்காக செயல்படுவோம் என உறுதியளித்தார்.

PREV
12
தவெக தலைவர் விஜய் பேச்சு

காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தவேக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. முன் பதிவு செய்யப்பட்ட QR கோடு நுழைவு சீட்டுகளை பெற்ற 2,000 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. பொதுமக்களின் கூட்டத்தை சீராகக் கண்ட்ரோல் செய்ய இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.

விஜய் அரங்கில் வருகை தந்து உரையாற்ற துவங்கிய சில நிமிடங்களில் அவரது பேச்சு அரசியல் கூட்டியதாக மாறியது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக அரசை நேரடியாக குறிவைத்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “மக்களை பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்களை நாங்கள் அமைதியாக பார்க்க மாட்டோம். நடித்துக்காட்டுபவர்களையும் கண்டிப்பாகக் கேள்வி கேட்போம்” என்று உறுதியான குரலில் தெரிவித்தார்.

22
அண்ணா, எம்ஜிஆர் பற்றி விஜய்

காஞ்சிபுரம் மக்களின் பிரச்சனைகளை உரையில் வலியுறுத்திய விஜய், பாலாறு நதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். “இந்த காஞ்சிபுரத்தைக் காத்து வாழ வைப்பது பாலாறு. இந்த மண்ணில் வாழ்வவர்களின் ரத்தத்தோடு கலந்து ஓடுகின்ற நதி இது. ஆனால், பெயர் பலத்த தலைவர்களை. சொல்லிக்கொண்டு ஆட்சியில் இருப்பவர்கள், இந்த நதிக்காக என்ன செய்திருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். அண்ணாதுரை மண்ணில் பேசுவதால் உணர்வோடு பேசுவதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து, எம்ஜிஆர் தனது கட்சிக் கொடியில் அண்ணாவின் படத்தை வைத்ததற்கான காரணத்தையும் விளக்கினார். "அண்ணாவும் எம்ஜிஆரும் மக்களுக்காக இருந்தவர்கள். அவர்கள் போல் செயல் காட்டுவோம், காட்டுவது போல நடிக்கப் போவதில்லை" என்று வலியுறுத்தினார். பொதுவாக எதுவும் தனிப்பட்ட விரோதமாக பேசவில்லை, மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் கேள்வி எழுப்புவது தான் எங்கள் கடமை எனவும் தெளிவுபடுத்தினார். மேலும், பரந்தூர் மற்றும் காஞ்சி பகுதிகளில் தொடங்கி தனது அரசியல் பயணத்தையும் நினைவுபடுத்தினார்.

Read more Photos on
click me!

Recommended Stories