தமிழகத்திலிருந்து அயோத்திக்கு பட்டாசு ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து! 3 மணிநேரம் வெடித்து சிதறிய பட்டாசுகள்

First Published | Jan 18, 2024, 7:59 AM IST

சிவகாசியில் இருந்து அயோத்திக்கு பட்டாசு ஏற்றிச் சென்ற லாரி நடுவழியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சுமார் 3 மணிநேரம் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின.

Ayodhya Ram mandir

உத்தரபிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக பிரதமர் மோடி 11 நாள் விரதம் இருந்து நாடு முழுவதும் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். குறிப்பாக தமிழ்நாட்டின் ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களிலும் பிரதமர் மோடி தரிசனம் செய்ய உள்ளார்.

Fire crackers

இந்நிலையில், தமிழகத்திலிருந்து பட்டாசு ஏற்றிக் கொண்டு அயோத்தி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் கார்கி கேடா கிராம பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

Tap to resize

Police investigation

அப்போது லாரியில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் 3 ணமிநேரமாக வெடித்து சிதறின. தீப்பிடித்த சிறிது நேரத்திலேயே லாரி முற்றிலுமாக எரிந்து நாசமானது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் அதிர்ஷ்வசமாக யாரும் காயமடையவில்லை. இதன் காரணமாக அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Latest Videos

click me!