இன்றைய TOP 10 செய்திகள்: சர்ச்சையில் சிக்கிய டிஎன்பிஎஸ்சி... சீனாவில் கலக்கிய மோடி...

Published : Sep 01, 2025, 11:18 PM IST

தமிழ்நாட்டில் புதிய 6 வழிச்சாலை அமைக்கும் திட்டம், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம், அரசியல் களத்தில் நடக்கும் சர்ச்சைகள், மற்றும் பிற முக்கிய செய்திகள்.

PREV
110
6 வழிச்சாலையில் பறக்கப் போகும் வாகனங்கள்!

தமிழ்நாடு அரசு சென்னையில் இருந்து வேலூர் வரை 142 கிலோமீட்டர் தொலைவுக்கு ஆறு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறை மூலமாக இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. பசுமைவெளிச் சாலையாக அமையவுள்ள இந்த 6 வழிச்சாலை ஒரகடத்தில் உள்ள தொழில்துறை மையம், செய்யாறு சிப்காட் தொழில் பூங்கா மற்றும் வேலூர் மாவட்டத்தில் அமையவிருக்கும் மற்றொரு சிப்காட் பூங்கா ஆகியவற்றை இணைக்கும் வகையில் போடப்பட உள்ளது.

210
ஜெர்மனியில் முதல்வர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஐரோப்பிய முதலீட்டுப் பயணத்தின் முதல் நாளில், ஜெர்மனியின் முன்னணி நிறுவனங்களுடன் ரூ. 3,201 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் 6,250 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

310
ஸ்டாலினை கலாய்த்த அண்ணாமலை

ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் மூடப்பட்ட தமிழ்த் துறையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டதாகக் கூறுவது, 'போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு' என்ற நகைச்சுவைக் காட்சிக்குச் சற்றும் குறைந்ததல்ல என்று தமிழக முன்னாள் பாஜக தலைவர் கே. அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

410
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800-ஐ தாண்டியுள்ளதாக தாலிபன் அரசு தெரிவித்துள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுக்கள் இரவு பகலாக ஈடுபட்டுள்ளன. 2,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் தாலிபன் அரசு தெரிவித்துள்ளது.

510
டீ விற்றவரா இவர்..?

தனது சிறுவயதில் குஜராத்தின் வத்நகர் ரயில் நிலையத்தில் தனது தந்தை நடத்திய டீக் கடையில் டீ விற்ற மோடியின் அபார உழைப்பும், அசாத்திய தலைமைப் பண்பும் அவரை ஒரு உலகளாவிய நாயகனாக்கி ரசிக்கிறது.

610
சென்னையில் பரவும் காய்ச்சல்!

நமது அண்டை மாநிலமான கேரளாவில் 'அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்' என்றழைக்கப்படும் மூளையை தின்னும் அமீபா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டு கேரளாவில் இதுவரை 42 பேருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அசுத்தமான, தேங்கி நிற்கும் நன்னீரில் வாழும் அமீபா, ஏரிகள், குளங்கள், ஆறுகள் மற்றும் சரியாக பராமரிக்கப்படாத நீச்சல் குளங்களில் குளிக்கும்போது மூக்கு வழியாக உடலுக்குள் புகுந்து விடுகிறது.

710
அய்யா வைகுண்டரை இழிவுப்படுத்திய டிஎன்பிஎஸ்சி!

டிஎன்பிஎஸ்சி தேர்வில் அய்யா வைகுண்டரை இழிவுப்படுத்தியதாக கூறி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அய்யா வைகுண்டரை முடிவெட்டும் பெருமாள் என்று கூறுவதா? அரசுப் பணியாளர் தேர்வாணையம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

810
எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் கருத்து பதிலடி கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஏழைகளை விமர்சனம் செய்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது என்று கடுமையாக சாடியுள்ளார். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஊழலில் ஈடுபட்டவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் உறுதி அளித்தார்.

910
ஆசியாவின் சிறந்த பணிச்சூழல்

இந்தியா ஆசியாவிலேயே சிறந்த பணிச்சூழலைக் கொண்ட நாடாக 'கிரேட் பிளேஸ் டூ ஒர்க்' அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த 100 நிறுவனங்களில் 48 இந்தியாவில் செயல்படுகின்றன, பணியாளர் அனுபவத்தில் இந்தியாவின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன.

1010
கேரளாவை முன்னேற்ற பாடுபடுவேன்

கேரளாவுக்காகப் பணியாற்றுவது தனது தந்தைக்கு தான் அளித்த வாக்குறுதி என்று பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறினார். தனது தந்தை எம்.கே. சந்திரசேகர் மறைவுக்குப் பிறகு திருவனந்தபுரம் திரும்பிய பிறகு தனது முதல் பொது நிகழ்வில் கலந்து கொண்டார். அதாவது ஆஷா பணியாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு உறுதியளிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஓணக் கிட்களை அவர் வழங்கினார்.

Read more Photos on
click me!

Recommended Stories