மூட்டை, மூட்டையாக வரப்போகிறது வெங்காயம், தக்காளி.? இனி மார்க்கெட்டில் விலை இவ்வளவு தான்

First Published | Sep 27, 2024, 8:13 AM IST

தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்வால் சமையலுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஓட்டல்களில் தக்காளி சட்னி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது, வீடுகளிலும் பயன்பாடு குறைந்துள்ளது. வெங்காய ஏற்றுமதி வரி நீக்கமும் விலை உயர்வுக்குக் காரணமாகிறது.

போட்டி போட்டு உயரும் காய்கறி விலை

போட்டி போட்டு உயரும் காய்கறி விலை

சமையலுக்கு முக்கிய தேவையானது தக்காளி மற்றும் வெங்காயமாகும், இந்த இரண்டும் மட்டும் இல்லையென்றால் இல்லத்தரசிகள் சமையல் செய்ய முடியாமல் திணறுவார்கள். அந்த நிலை தான் தற்போது உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை குறைந்திருந்த தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது போட்டி போட்டு உயர்ந்து வருகிறது. இதனால் காய்கறி சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வீடு முதல் ஓட்டல் வரை தக்காளி சட்னி, வெங்காய குழம்பு, சாம்பார் என எது சமைத்தாலும் இந்த இரண்டும் முக்கிய தேவையாக இருக்கும். தற்போது தொடர்ந்து உயர்ந்து வரும் விலையால் ஓட்டல்களில் தக்காளி சட்னியானது தற்காலிகத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல வீடுகளிலும் தக்காளி மற்றும் வெங்காயத்தை பயன்படுத்தி சமைப்பது குறைந்துள்ளது. 

ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.?

ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.?

இந்த இரண்டும் இல்லாமல் மற்ற காய்கறிகளின் உதவியோடு சமைக்கும் நிலை உருவாகியுள்ளது. கடந்த வாரம் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிடு, கிடுவென அதிகரித்து 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக தக்காளியின் வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பால் மதுரை, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட சந்தையில்  சந்தையில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.  15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி கடந்த வாரம் வரை 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tap to resize

வெங்காயம் உற்பத்தி பாதிப்பு

வெங்காயம் உற்பத்தி பாதிப்பு

தற்போது  இரண்டு மடங்காக அதிகரித்து 600 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால்  விற்பனை விலையும் அதிகரித்துள்ளது. எனவே காய்கறி சந்தையில் கிலோ கணக்கில் வாங்கி செல்லும் நிலை மாறி தற்போது ஒரு கிலோ வாங்கி செல்வதே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதேபோல வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளது.  இந்தியாவில் பொறுத்தவரை கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் அதிகளவில் பயிரடப்படுகிறது.

கடந்த மாதம் பெய்த கன மழையின் பாதிப்பால் வெங்காயம் பயிர் பாதிக்கப்பட்டது. வெங்காய பயிர் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. இதனால் குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் வெங்காயத்துக்கான ஏற்றுமதி வரியை அண்மையில் மத்திய அரசு நீக்கியதை தொடா்ந்து நாடு முழுவதும் சில்லறை விற்பனையில் வெங்காய விலை அதிகரித்தது.

வெங்காய விலையை கட்டுப்படுத்த திட்டம்

வெங்காய விலையை கட்டுப்படுத்த திட்டம்

ஒரு கிலோ வெங்காயம் தமிழகத்தில 60 முதல் 80 ரூபாய் விரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மஹாராஷ்டிராவில் இருந்து வங்கதேசம், இலங்கை, துபாய், மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதியாகி வருகிறது. இதனால் விலை உயர்ந்துள்ளது. இதனையடுத்து  வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசின் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்தும் கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெங்காயத்தை சில்லரை விற்பனையை தொடங்கியுள்ளது. அந்த வகையில் டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் விற்பனையை செய்து வருகிறது.  மேலும் சேமிப்புக் கிடங்குகளில் உள்ள வெங்காயத்தை நாடு முழுவதும் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

காய்கறி விலை என்ன.?

காய்கறி விலை என்ன.?

இதே போல தக்காளி விலையிலும் ஏற்றம் இருப்பின், தேவைப்படும்பட்சத்தில் மத்திய அரசு தலையிட்டு அதன் விலையையும் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதே போல தமிழக அரசும் நியாயவிலைக்கடைகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தக்காளி மற்றும் வெங்காயத்தை விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சென்னை கோயம்பேட்டில் காய்கறி விலையை தற்போது பார்க்கலாம். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது
 

அதிகரிக்கும் காய்கறி விலை

அதிகரிக்கும் காய்கறி விலை

பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 1 கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
 

Latest Videos

click me!