Tomato Price Today :ஒரே நாளில் சரசரவென குறைந்த தக்காளி விலை.! கோயம்பேட்டில் ஒரு கிலோ என்ன விலை.?

Published : Aug 10, 2023, 08:24 AM IST

தக்காளி விலை கடந்த சில நாட்களாக அதிகரித்த வந்த நிலையில், நேற்று ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனையாகிய நிலையில், இன்று 20 ரூபாய் குறைந்து 70 ரூபாய்க்கு விறைபனை செய்யப்படுகிறது.   

PREV
13
Tomato Price Today :ஒரே நாளில் சரசரவென குறைந்த தக்காளி விலை.! கோயம்பேட்டில் ஒரு கிலோ என்ன விலை.?

உச்சத்தை தொட்ட தக்காளி

தங்கத்துக்கு நிகராக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தக்காளியை பொதுமக்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன் காரணமாக வீடுகள் மற்றும் ஓட்டல்களில் தக்காளி சம்பந்தமான உணவுகளை தயாரிப்பதை தவிர்த்தனர். மேலும் தக்காளி விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 ரூபாய்க்கு குறைவாக இருந்ததால் கிலோ கணக்கில் பொதுமக்கள் தக்காளி வாங்கிய நிலை மாறி எண்ணிக்கை அளவில் தக்காளி வாங்கி வரும் நிலை உருவானது. இதனை கருத்தில் தமிழக அரசு சார்பாக தமிழகம் முழுவதும் சுமார் 500 நியாய விலைக்கடைகளில்  தக்காளியை ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தனர். 

23

தக்காளி விலை குறைந்தது

இருந்த போதும் பொதுமக்கள் தக்காளியை வெளி மார்க்கெட்டில் வாங்க முடியாத அளவிற்கு ஒரு கிலோ 200 ரூபாய் என்ற உச்சத்தை அடைந்தது. அடுத்த சில நாட்களில் தக்காளி விலை படிப்படியாக குறைய தொடங்கியது. 180, 150, 100 என விற்பனையான தக்காளி நேற்று மற்றும் முன்தினம் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினந்தோறும் 1100 டன் தக்காளி வந்த நிலையில் கடந்த ஒரு மாதமாகவே 300 முதல் 400 டன் தக்காளியே வந்தது. இந்தநிலையில் இன்று 700 டன் தக்காளி வந்ததால் ஒரு கிலோ தக்காளிக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிலோ  70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தக்காளி விலை குறைந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் ஓரளவு நிம்மதி அடைய வைத்துள்ளது.

33
You can now buy tomatoes at just Rs 70 Kg, Here's how to order online

விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

தக்காளி விலை அதிகரிக்க பல்வேறு காரணங்களை விவாசியிகள் தெரிவிக்கின்றனர். அதிகமான வெப்பம், தவறி பெய்த மழை உள்ளிட்டவைகள் தான் காரணம் என ஒரு தரப்பினரும், இல்லை கடந்த ஆண்டு தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் தக்காளியை குப்பை தொட்டியில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் தக்காளிக்கு உற்பத்தி செய்வததை தவிர்த்து விட்டு மாற்று பயிருக்கு விவசாயிகள் மாறியது தான் தக்காளி வரத்து குறைவுக்கு காரணம் என கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

Power Shutdown in Chennai: சென்னையில் பல இடங்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை! உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!

click me!

Recommended Stories