Power Shutdown in Chennai: சென்னையில் பல இடங்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை! உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!

First Published | Aug 10, 2023, 6:42 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர், கிண்டி, ஆவடி, போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

அம்பத்தூர்:

மீனம்பேடு கங்கை நகர், முனுசாமி கோயில் தெரு, இ.பி. காலனி, ரெட்ஹில்ஸ் மெயின் ரோடு, நாகாத்தம்மன் கோயில் தெரு, ஏ.கே.நகர், ஓம் சக்தி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

Tap to resize

power cut

தாம்பரம்:

பல்லாவரம் பெரியார் நகர், அம்மன் நகர், அருமலை சாவடி, திருசூலம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் அடங்கும்.

ஆவடி:

பட்டாபிராம் மேற்கு கோபாலபுரம், முல்லை நகர், வள்ளலார் நகர், சிபிஎம் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் அடங்கும்.

அடையார்:

கந்தன்சாவடி சோழமண்டல் கலை கிராமம், ஈஞ்சம்பாக்கம் பிரதான சாலை, விஜிபி லேஅவுட், விஓசி தெரு, பெத்தேல் நகர் வடக்கு & தெற்கு, பம்மல் நல்ல தம்பி, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு, பாரதி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

போரூர்:

எம்.ஆர்.கே நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, முத்து நகர், பங்களா தோப்பு, பொன்னியம்மன் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

கிண்டி:

ஆதம்பாக்கம் பார்த்தசாரதி நகர், நியூ காலனி, வி.வி. காலனி, என்.ஜி.ஓ காலனி, செகரெட்ரியேட் காலனி, அம்பேத்கர் நகர், வானுவம்பேட்டை சரஸ்வதி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, மகாலட்சுமி நகர், ஏஜிஎஸ் காலனி, கல்கி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

பெரம்பூர்:

சிட்கோ 1 முதல் 10வது தெரு, அம்மன் குட்டை, நேரு நகர், வில்லிவாக்கம், பாபா நகர், சவுத் ஹை கோர்ட் காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

ஐ.டி.காரிடர்:

எழில் நகர், கண்ணகி நகர், வி.பி.ஜி. அவென்யூ, குமரன்குடில், மவுண்ட் பேட்டன் தெரு, செகரெட்ரியேட்  காலனி, அன்னை பார்வதி நகர், மகாத்மா காந்தி நகர், ராமலிங்க நகர், கஸ்தூரிபாய் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!