1947-ம் ஆண்டு இந்தியா விடுதலையான பிறகு, மக்கள் பேசும் மொழிகளின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்படி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது சென்னை மாகாணத்தின் சில பகுதிகள் ஹைதராபாத், திருவிதாங்கூர், மைசூர் மாகாணங்களின் பகுதிகளுடன் இணைக்கப்பட்டன.