Published : Apr 25, 2025, 10:50 AM ISTUpdated : Apr 25, 2025, 11:11 AM IST
வி.ஏ.ஒ., இளநிலை உதவியாளர் உட்பட 3,935 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
TNPSC Group 4 Notification 2025 Released: தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்வாகும் அரசு பணி என்பதால், இந்த தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான குரூப்-4 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
24
TNPSC Group 4
குரூப்-4 தேர்வு அறிவிப்பு
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- 3,935 பணி இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு ஜூலை 12ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை நடைபெறுகிறது. குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று முதல் மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
34
TNPSC Group 4 Exam Date
திருத்தம் செய்ய கால அவகாசம்
விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மே 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுக்கு 10ம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
44
TNPSC Group 4 Notification 2025
தேர்வர்கள் அதிர்ச்சி
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் அதிகளவில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் வெறும் 3,935 காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே அறிவிப்பு வெளியாகியுள்ளதால் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.