Published : Apr 25, 2025, 10:31 AM ISTUpdated : Apr 25, 2025, 11:09 AM IST
தமிழக ஆளுநர் ரவி ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாட்டை அரசுப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு மாறியது. இந்த பரபரப்பான சூழலில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
Tamil Nadu Governor Vice-Chancellors Conference : தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இதனையடுத்து ஆளுநர் ரவியின் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், ஆளுநர் ஒப்புதல் அளிக்காத 10 சட்ட மசோதாக்களுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இதன் காரணமாக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து முதலமைச்சருக்கு சென்றது.
24
Vice-Chancellors Conference
துணைவேந்தர்கள் மாநாட்டில் துணை குடியரசு தலைவர்
இந்த பரபரப்பான சூழ்நிலையில் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 26 தேதிகளில் உதகையில் நடத்த ஆளுநர் ரவி திட்டமிட்டார். இந்த மாநாட்டில் துணை குடியரசு தலைவர், துணை வேந்தர்கள் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்காக துணை குடியரசு தலைவர் இன்று உதகைக்கு வருகை தந்துள்ளார். தமிழகத்தில் உள்ள 19 அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், 9 தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் மூன்று மத்திய பல்கலை துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
34
Jagdeep Dhankar
மாநாட்டை புறக்கணிக்கும் துணைவேந்தர்கள்
இந்த பரபரபான சூழ்நிலையில் ஆளுநர் ரவி கூட்டியுள்ள துணைவேந்தர்கள் கூட்டத்தை அரசுப்பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் சந்திரசேகர் பங்கேற்கவில்லையென தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் 41 பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 9 துணைவேந்தர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். அந்த 9 பேரும் மத்திய அரசு மற்றும் தனியார் துறை துணைவேந்தர்களாவர்.
44
Vice-Chancellors Conference
காலியாக உள்ள துணைவேந்தர்கள் பணியிடங்கள்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன், தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம்ஆகிய 8 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்கள் இல்லையென குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு வருடங்களாக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் காரணமாக புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.