TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய செய்தி! மிஸ் பண்ணிடாதீங்க!

First Published | Dec 12, 2024, 1:38 PM IST

TNSPC Group 2 Mains Exam Free Coaching: டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

TNPSC

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி நிரப்பப்பட்டு வருகின்றது. இதில், குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல நிலைகளில் தேர்வு நடத்தப்படுகின்றன. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணியில் 2,327 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 20ம் தேதி வெளியாகி ஜூலை 19 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 

TNPSC Group 2 Exam

இந்த தேர்வுக்கு தமிழக முழுவதும் மொத்தமாக 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5.40 பேர் மட்டுமே தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காலி இடங்களின் எண்ணிக்கை நவம்பர் மாதம் அதிகரிக்கப்பட்டது. திருத்தப்பட்ட பணிகளின் அடிப்படையில் வனத்துறையில் வனவர் பணி இடங்கள் 121 ஆகவும், குற்ற விசாரணைத் துறையில் 22 பணி இடங்கள் ஆகவும், லஞ்ச ஒழிப்புத்துறையில் 3 ஆகவும், தொழிலாளர் துறையில் 16 ஆகவும், சட்டத் துறையில் 6 ஆகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக குரூப் 2 தேர்வுக்கு 213 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், மொத்த காலியிடங்கள் 2,327-ல் இருந்து 2 ஆயிரத்து 540 ஆக உயர்ந்துள்ளது. 

Tap to resize

TNPSC News

இதனால் தேர்வு எழுதிய தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேர்வு முடிவுகள் இந்த மாதத்திற்குள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்மைத் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் முதன்மைத் தேர்வுகளுக்கான இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுவதாக கோவை ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Coimbatore Collector

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பின் வாயிலாக, துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணிகள் அடங்கிய குரூப் 2 தேர்வுக்கு 534 காலிப் பணியிடங்களுக்கும் தணிக்கை ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பணிகள் அடங்கிய குரூப் 2 A தேர்வுக்கு 2006 காலிப் பணியிடங்கள் என மொத்தம் 2,540 காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வானது 2024 செப்டம்பர் 14ம் தேதி நடந்தது.

Free Model Exam Conducted

இந்த தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு முதன்மைத் தேர்வானது பிப்ரவரி மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதன்மைத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்று வருகிறது. வாரம் இரு மாதிரித் தேர்வுகள், முந்தைய ஆண்டு வினாத்தாள் கலந்துரையாடல்களுடன் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்பட்டு வருகிறது. 

Latest Videos

click me!