தலித் பெண்கள் சொந்த நிலம் வாங்கலாம்! உதவிக்கரம் நீட்டும் திமுக அரசின் திட்டம்!

Published : Oct 23, 2024, 03:11 PM ISTUpdated : Oct 23, 2024, 03:14 PM IST

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பெண்களுக்கான புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, "ரூ. 20 கோடி ஒதுக்கீட்டில் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் செயல்படுத்தப்படும்" என்று கூறினார்.

PREV
17
தலித் பெண்கள் சொந்த நிலம் வாங்கலாம்! உதவிக்கரம் நீட்டும் திமுக அரசின் திட்டம்!
three women gets training to be temple priests in tamil nadu

தமிழ்நாடு அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கறளுக்காக மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணத் திட்டம் போன்ற திட்டங்களை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கொண்டுவந்துள்ளது. அந்த வகையில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் எளிதாக நிலம் வாங்கும் திட்டமும் அண்மையில் அறிமுகமாகியுள்ளது.

27

சென்ற ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பெண்களுக்கான புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, "ரூ. 20 கோடி ஒதுக்கீட்டில் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் செயல்படுத்தப்படும்" என்று கூறினார்.

37
CM Stalin

நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின் கீழ் மொத்தச் செலவில் அதிகபட்சம் 50% அல்லது ரூ. 5. லட்சம் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விண்ணப்பதாரர் 18-55 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளன.

47
Magalir urimai thogai scheme

விண்ணப்பதாரரின் பெயரில் எந்த விவசாய நிலமும் இருக்கக்கூடாது. விண்ணப்பதாரரின் தொழில் விவசாயமாக இருக்க வேண்டும். இந்தத் திட்டம் முழுக்க முழுக்க விவசாயம் செய்வதற்கு மட்டுமே வழங்கப்படும். பெண்கள் விவசாயத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் விதமாக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுஉள்ளது.

57
magalir urimai thogai

முதல் கட்டமாக இந்த திட்டத்திற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். விண்ணப்பதாரர் மற்றும் உறவினர்கள் பெயரில் வாங்க முடிவுசெய்திருக்கும் நிலமும் 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சையாக இருக்கலாம்.

67
magalir urimai thogai

நிலத்தின் விலை சந்தையைப் பொறுத்து மதிப்பீடு செய்யப்படும். முத்திரைத் தாள் மற்றும் பதிவு கட்டணம் முழுமையாகக் கிடையாது. வாங்கிய நிலத்தை பத்து ஆண்டுகளுக்குள் விற்கவும் கூடாது.

77

விவசாயத் தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை நில உடைமையாளர்களாக மாற்றி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த சமூக நீதியை நிலைநாட்ட இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories