கரூர் கூட்டநெரிசல் வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு முட்டுகட்டை போடும் திமுக.. உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு மனு

Published : Dec 02, 2025, 11:28 AM IST

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழுவிடமே ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு.

PREV
13
கரூர் கூட்ட நெரிசல்

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 41 பேரி பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில். இது தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு சார்பில் அருணா ஜெகதீசனின் ஒருநபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

23
சிபிஐ விசாரணை

ஆனால் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக வெற்றி கழகம் மற்றும் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர் தரப்பில் வழக்கை சிபிஐ வசம் மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதன் அடிப்படையில் கரூர் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த விசாரணையை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கண்காணிப்பார் என்றும் உத்தரவிடப்பட்டது. நீதிமன்றத்தின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

33
தடை கோரும் தமிழக அரசு

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கூட்டநெரிசல் விவகாரத்தில் தமிழக அரசு அமைத்த ஒருநபர் ஆணையத்தின் விசாரணை சரியான முறையில் சென்றுகொண்டிருந்தது. அதே போன்று உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவும் சரியான முறையில் விசாரணை மேற்கொண்டது. ஆகையால் சிபிஐ விசாரணையை ரத்து செய்துவிட்டு மீண்டும் ஒருநபர் ஆணையம் மற்றும் சிறப்பு விசாரணைக் குழுவுக்கே மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories