TN Budget 2026: கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.8,000.. விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் சர்ப்ரைஸ் வெயிட்டிங்!

Published : Aug 03, 2026, 04:14 PM IST

TN Budget 2026: தமிழகத்தில் விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.8,000 வழங்கும் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

PREV
14
தமிழக பட்ஜெட் 2026

தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த நடிகர் விஜய்யின் தவெக அரசு திமுக கூட்டணி கட்சிகளை தன் வசப்படுத்தி அந்தக் கட்சியுடன் கைகோர்த்து ஆட்சியை நடத்தி வருகிறது இந்த நிலையில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5ஆம் தேதி (புதன்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது.

மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 2500, அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என வாக்குறுதி மழை பொழிந்து ஆட்சிக்கு வந்த விஜய் அரசு, பட்ஜெட்டில் மேற்கண்ட இந்த இரண்டு திட்டங்களுக்கும் கிரீன் சிக்னல் காட்டுமா? என பெரும் எதிர்பார்க்கும் எழுந்துள்ளது. இதேபோல் தேர்தலுக்கு முன்பாக கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பயனடையும் வகையில் ஏராளமான வாக்குறுதிகளை தவெக அறிவித்து இருந்தது.

24
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.8,000

இப்போது மாணவர்கள் படை பலத்துடன் ஆட்சிக்கு வந்து விட்டதால் பட்ஜெட்டில் கல்லூரி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடையும் விதமாக சில சூப்பரான திட்டங்களை செயல்படுத்த விஜய்யின் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 8000 வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் இது தொடர்பாக பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு பள்ளிகளில் பெரும்பாலும் ஏழை எளிய மாணவர்களே அதிகம் பயின்றனர். பிளஸ் டூ முடித்து மேற்படிப்புக்காக கல்லூரிகளில் சேர்வதற்கு அவர்கள் பணரீதியாக பெரும் சிரமம் அடைகின்றனர். இதனை கருத்தில் கொண்டே அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 8000 வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

34
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன்?

தவெக‌ அரசு வழங்கும் 8,000 ரூபாய் அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் செலவுகளை சமாளிக்கவும், புதிய ஆடை வாங்கும் செலவுகளுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் உலா வருகின்றன. ஜென்சி கிட்ஸ் எனப்படும் முதல் முறை வாக்காளர்களின் பெரும் ஆதரவோடு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள முதல்வர் விஜய் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நலன் பயக்கும் திட்டங்களை அதிகம் உள்ளடக்கிய வகையுக் பட்ஜெட் இருக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.

இது தவிர, கல்லூரிகளில் இளங்கலை படிப்பு முதல் முதுகலை படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எந்த ஒரு பிணையும் இன்றி 20 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன் வழங்கும் வகையில் ஒரு திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கண்ட இந்த இரண்டு திட்டங்களும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் கண்டிப்பாக இடம் பெறும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

44
திராவிட கட்சிகளின் பாதையில் விஜய் அரசு

தமிழகத்தை பொறுத்தவரை கல்வியில் வட‌மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக என்ற இரு பெரும் திராவிட கட்சிகளும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளன. அந்த வகையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசும் மாணவர்களின் நலன் காக்கும் வகையில் புதிய திட்டங்களை கொண்டு வர முன்வந்திருப்பது நமது மாநிலத்தின் கல்வித்தரத்தை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

Read more Photos on
click me!

Recommended Stories