திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தை மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கை முதல் நாளில் எத்தனை கோடி கிடைத்துள்ளது என்ற தகவலை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
நினைத்தாலே முக்தி தரக் கூடிய புண்ணிய தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். அது மட்டுமல்லாமல் இக்கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி மற்றும் பிரதோஷம் நாட்களில் வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் அருளை பெறுகின்றனர். Tiruvannamalai Annamalaiyar Temple Undiyal Collection
24
Tiruvannamalai Annamalaiyar temple
குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த பக்தர்கள் அலைக்கடலென திரண்டு திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர். மன குறையுடன் வந்து கிரிவலம் செல்பவர்களின் குறையை நிவர்த்தி செய்வதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் நினைத்த வேண்டுதல் நிறைவேற்றி விட்டால் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
34
Pournami
இந்நிலையில் தை மாத பவுர்ணமி நிறைவடைந்துள்ள நிலையில், அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கத்தில் வைக்கப்பட்ட உண்டியல்கள் என அனைத்து உண்டியல்கள் எண்ணும் பணியில் நேற்று முதல் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
44
undiyal kanikai
இந்நிலையில் தை மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கை ரூ.3.52 கோடி கிடைத்துள்ளது. 229 கிராம் தங்கம் மற்றும் 1.75 கிலோ வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்னும் முடிவடையாததால் இன்று பணி தொடரும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.