நள்ளிரவில் போன் போட்ட பூமணி! 65 வயதில் துள்ளிக்குதித்து போன சின்னப்பராஜ்! இறுதியில் நடந்த எதிர்பாராத ட்விஸ்ட்!

Published : Nov 12, 2025, 03:43 PM IST

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சின்னப்பராஜுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததால் ஏற்பட்ட தகராறில், உல்லாசமாக இருக்கலாம் என ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று பூமணி இந்த கொலையை செய்துள்ளார். பின்னர் அவரே காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

PREV
14

திருப்பூர் மாவட்டம் அவினாசி வள்ளுவர் வீதி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பராஜ் (65). இவர் அவினாசி சிந்தாமணி தியேட்டர் பகுதியில் சொந்தமாக மரக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி அந்தோணியம்மாள். இவர்களுக்கு இரண்டு மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். இந்நிலையில் அவிநாசி அருகே சின்னேரிபாளையம் ஊராட்சி வேலாங்காடு பகுதியை சேர்ந்த கனகராஜ் மனைவி பூமணி (48) என்பவருக்கும், சின்னப்பராஜிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர்.

24

இதனிடையே பூமணியின் கணவர் கனகராஜ், சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் சின்னப்பராஜ் நிறைய பெண்களுடன் பழக்கம் இருந்துள்ளது. இதுதொடர்பாக பூமணி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சின்னப்பராஜை கொலை செய்ய பூமணி முடிவு செய்துள்ளார்.

34

இந்நிலையில் பூமணி, இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என கூறி சின்னப்பராஜை ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளார். இதனை நம்பி சின்னப்பராஜ் சென்றுள்ளார். நள்ளிரவு 12 மணியளவில் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு, ரோட்டின் ஓரமாக இருந்த சிறு பாலத்தின் தடுப்புச்சுவரின் மீது அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

44

இதனால் ஆத்திரமடைந்த பூமணி, சின்னப்பராஜை பலமாக தாக்கி ஓடைக்குள் தள்ளிவிட்டுள்ளார். தலையில் அடிபட்டு, படுகாயமடைந்த சின்னப்பராஜ் மயங்கி விழுந்தார். அப்போது ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து சின்னப்பராஜ் உடல் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். தீக்காயங்களுடன் அலறியபடி அங்கிருந்து சுமார் 50 அடி தூரம் உயிருடன் ஓடிய சின்னப்பராஜ் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து வீட்டுக்கு சென்ற பூமணி, அதிகாலை அவினாசி காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னப்பராஜின் சடலத்தை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories