பின்னர் 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 4.45 மணிக்கு மேல் 5 மணிக்குள் உதய மார்த்தாண்ட தீபாராதனையும், காலை 6 மணிக்கு மேல் கால சந்தி தீபாராதனையும், 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடைபெற உள்ளது. மேலும் மாலை 3.30 மணிக்கு சாயரட்சையும், 6 மணிக்கு ராக்கால அபிஷேகமும், 7 மணிக்கு ராக்கால தீபாராதனையும், 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும், 8 மணி முதல் 8.30 மணிக்குள் பள்ளியறை திருக்காப்பிடுதல் பள்ளியறை தீபாராதனை நடைபெறுகிறது.