Thirumavalavan: விசிக தலைவர் திருமாவளவன் கார் மீது ஸ்கூட்டர் மோதியதாகக் கூறப்படும் சம்பவத்தில், வழக்கறிஞர் தாக்கப்பட்டதாக வீடியோ வைரலானது. திமிராக முறைத்ததால்தான் அடி விழுந்ததாகவும், 'அடங்க மறு' என்பது வன்முறையைத் தூண்டும் சொல் அல்ல என்றும் விளக்கம்.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அக்டோபர் 7ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அருகே தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருமாவளவன் சென்ற கார் முன்னாள் சென்ற ஒரு ஸ்கூட்டர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதை இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த வழக்கறிஞர் கட்சியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தொல். திருமாவளவனுடன் காரில் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்த வழக்கறிஞரை போலீசார் முன்னிலையில் ஓட ஓட விரட்டி தாக்கினர்.
24
பாஜக கண்டனம்
இதுதொடர்பான வீடியோ வைரலானது. இதற்கு அண்ணாமலை, நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்தனர். அதில் பட்டப்பகலில் அதிர்ச்சியூட்டும் வகையில், விசிக குண்டர்கள் ஒரு வழக்கறிஞரைத் தாக்கியதாக கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு திருமாவளவன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார். அதில், அந்த நபர் வேண்டுமென்றே காருக்கு முன்னாள் ஸ்கூட்டரை நிறுத்தி வம்பிழுத்ததாகவும் விசிகவினர் அவரை தாக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் சதி என்று திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
34
திருமாவளவன்
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய திருமாவளவன்: ஒரு கட்சித் தலைவர் முன்னாடி ஒருத்தன் டூவீலரை வந்து நிறுத்துறா அப்போ அவருக்கு பாதுகாப்பு என்னன்னு யாரும் கேட்கவில்லை. திருமாவளவன் ஏன் இறங்கி வந்து தடுக்கவில்லை என்று கேட்கிறார்கள். ஒரு நிமிஷம் கூட இல்ல என்ன நடந்தது தெரியல.
அவன் மட்டும் வந்தான்... நின்னான்.. முறைச்சான் யாராக இருந்தா என்ன, அவங்க கிட்ட முறைச்சதால் அவங்க அடிச்சாங்க. அவங்க யாரு என்ன ஜாதி எந்த மதமும் ஒன்னும் தெரியாது. திமிரா முறைச்சு பார்த்ததுக்கு தான் அந்த அடி. நாளு தட்டு தட்டுனாங்க. அதுவும் ஒழுங்காக அடி இல்லை. அவன் உடனே வந்து மயக்கம் போட்டு நெஞ்சு வலிக்குதுன்னு ஒரு நாடகம் ஆடுறான். உடனே திருமாவளவன் அடிக்க சொன்னார். அடங்க மறு' என்பதைத்தான் சொல்லியிருக்கிறேனே தவிர, எந்த இடத்திலுமே வன்முறையைத் தூண்டியதில்லை. அடங்க மறு என்பது ஒரு அரசியல் என்றார்.