திருச்செந்தூர் முருகன் கோவில்! அள்ள அள்ள தங்கம்! குவிந்த கோடிகள்! வியந்த பக்தர்கள்!

First Published | Jan 12, 2025, 1:41 PM IST

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இரண்டு நாட்கள் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில், 4.71 கோடி ரூபாய் பணம், 1,603 கிராம் தங்கம், 52,230 கிராம் வெள்ளி மற்றும் 1,117 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளன.

Thiruchendur Murugan Temple

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடு திருப்பரங்குன்றம், 2வது படை வீடு திருச்செந்தூர், 3வது படை வீடு பழநி,  4வது படை வீடு சுவாமிமலை, 5வது படை வீடு திருத்தணி, 6வது படை வீடு பழமுதிர்சோலை ஆகியவைகள் உள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கு ஒவ்வொரு சிறப்பு அம்சம் உண்டு. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரின் கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கிறது சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இந்த கோவில் உலக பிரசித்தி பெற்றது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசிக்க திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள்.

Thiruchendur Temple

அதுவும் கார்த்திகை மாதம் வந்துவிட்டால் ஐயப்பன் பக்தர்கள் கோவிலில் குவிவார்கள். அப்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் நினைத்த காரியம் நிறைவேறினோலோ, ஏதாவது வேண்டுதல் இருந்தாலோ உண்டியல்களில் பணம், நகை, தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். 

இதையும் படிங்க: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஜனவரி 18ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Tap to resize

Thiruchendur

இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள உண்டியல்களில் சேர்ந்த காணிக்கை பணத்தை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இதன்படி 4 கோடியே 71 லட்சத்து 90 ஆயிரத்து 172 ரூபாய் உண்டியல் வருவாய் வசூலாகியுள்ளது.

இதையும் படிங்க:  மீண்டும் தமிழகத்தில் மழை எச்சரிக்கை! வானிலை மையம் முக்கிய அப்டேட்!

thiruchendur

மேலும் 1,603 கிராம் தங்க பொருட்களும், 52,230 கிராம் வெள்ளியும், 1 லட்சத்து 19 ஆயிரம் கிராம் பித்தளையும் காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல், 1,117 வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!