Erode East By-election
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
DMK Candidate
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுவதாகவும், அக்கட்சி சார்பில் சஞ்சய் சம்பத் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக திமுக போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது மட்டுமல்லாமல் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏவும் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டார்.
AIADMK
இதனையடுத்து ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா? அல்லது விக்கிரவாண்டி இடைத்தேர்தலை போல புறக்கணிக்குமா? என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார்.
Edappadi Palanisamy
அதில், நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்களும், திமுக-வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும்; பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும்; தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை, அதிமுக புறக்கணிக்கப்பதாக விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி பாஜகவுக்கும் விட்டுக்கொடுக்கிறீர்கள் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
KC Palanisamy
இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியிடவில்லை என்று சொல்வது பணம் செலவாகும் என்று பணத்தை பாதுகாக்கவா? அப்படி இருந்தால் நீங்கள் 4 வருடம் ஆட்சியில் இருக்கும் போது கட்சி நிதி என்று உருவாக்கினீர்களே அது என்ன ஆனது? லாபம், நஷ்டம் கணக்கு பார்க்க நீங்கள் வியாபாரம் நடத்துகிறீர்களா அல்லது கட்சி நடத்துகிறீர்களா?
Kongu Zone
கொங்கு மண்டலம் உங்கள் கோட்டை என்று சொல்கிறீர்கள், வெற்றியோ தோல்வியோ ஆளும் கட்சியின் பணபலம், படைபலம், அராஜகங்களை எல்லாம் தாண்டி கடுமையாக போட்டியிட்டு ஒரு கணிசமான வாக்கு வங்கியை பெறவேண்டும். திமுகவுக்கு மாற்று அதிமுக என்று இருந்ததை தெரிந்தே மாற்று சக்தியான NDA கூட்டணிக்கு விட்டுக்கொடுக்கிறீர்கள். அப்படிதான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கும் தற்போது பாஜகவுக்கும் விட்டுக்கொடுக்கிறீர்கள்.
AIADMK BJP
அதிமுகவை இப்படியே தேர்தல்களில் போட்டியிடாமல் வைத்துக்கொள்கிறோம் அந்த இடத்தில் எல்லாம் நீங்கள் போட்டியிட்டு உங்கள் கட்சியை வளர்த்துக்கொள்ளுங்கள்" என பாஜகவுடன் ஏதேனும் மறைமுக ஒப்பந்தம் வைத்துளீர்களா? அல்லது உங்களை காப்பாற்றிக்கொள்ள மட்டுமே கட்சி இருந்தால் போதும் என்று நினைக்கிறீர்களா? என கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.