காய்கறி விலை என்ன.?
காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், கோயம்பேடு சந்தையில் காய்கறி விலையானது சற்று உயர்ந்துள்ளது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாயும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாயும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
முருங்கைக்காய் விலை என்ன.?
குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அவரைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 8 ரூபாய், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
முருங்கைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய், பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்,பச்சை கத்தரிக்காய் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.