ஆரஞ்சு அலர்ட்.. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மிக கன மழை- வானிலை மையம் எச்சரிக்கை

First Published | Jan 7, 2024, 9:17 AM IST

வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது வட மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று அதிகாலை முதல் கரு மேகம் சூழ்ந்து காணப்படுகிறது

Nellore, Cyclone Michaung, Michaung, Cyclone

வட மாவட்டங்களில் கன மழை

லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக  இன்று (07.01.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

Chennai: Young women react as sea waves crash at the sea-shore ahead of the landfall of cyclonic storm Mandous, in Chennai, Thursday, Dec. 8, 2022. Heavy rainfall is predicted across Tamil Nadu, Puducherry and south of Andhra Pradesh as cyclone 'Mandous' over Bay of Bengal is expected to cross the coast between Puducherry and Sriharikota in neighbouring Andhra Pradesh on the midnight of December 9 the India Meteorological Department said on Thursday. (PTI Photo) (PTI12_08_2022_000158B)

தென் மாவட்டத்தில் கன மழை
 
நாளை 08.01.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

Tap to resize

சென்னை  வானிலை முன்னறிவிப்பு:

 வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான / கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

07.01.2024: தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

08.01.2024 மற்றும் 09.01.2024: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டாலும், போராட தூண்டினாலும் கடும் நடவடிக்கை- போக்குவரத்து துறை எச்சரிக்கை

Latest Videos

click me!